ஒரு யூனிகோடு டிப்

யூனிகோட்டில் தமிழ்கூறும் வலைமக்களைப் பொறுத்த வரை ‘க்’-கும் ‘ஷ’-வும் பஞ்சையும் நெருப்பையும் போல. டைரக்‍ஷன், எலக்‍ஷன் போன்ற ஆங்கிலச் சொற்களை எழுதும்போது அவை டைரக்ஷன், எலக்ஷன் என்று மாறிவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நிவாரணி: டைரக்‍ஷன் என்று அடிக்க விரும்புவதாக வைத்துக்கொள்வோம். நோட்பேடைத் திறந்து யூனிகோடில் “டைரக்” என்று அடித்துவிட்டு ரைட்க்ளிக் செய்க. அடுத்து மெனுவில் இருக்கும் கடைசி ஐட்டமான Insert Unicode control character-க்குச் செல்லுங்கள். மேலிருந்து மூன்றாவது ஐட்டமான ZWJ Zero width joiner-ஐ க்ளிக் செய்க.

இப்போது ஷன்-ஐ டைப் செய்தால் எந்த விபரீதமும் நேராது.

Unicode

5 thoughts on “ஒரு யூனிகோடு டிப்

  1. டட்ரி. பயன்படுவதில் நிரம்ப மகிழ்ச்சி! விக்னேஷ், உங்கள் வலைப்பதிவில் இருக்கும் ‘டிஸ்கி’ அவசரத்திலும் வேண்டாவெறுப்பாகவும் எழுதியது போல் தெரிந்தாலும் படிக்க நன்றாக இருந்தது. காலம் கெட்டுக் கிடக்கு, இல்ல?

  2. இன்னொரு குறுக்வழி இருக்கு. க் அடித்துவிட்டு Ctrl+Shift+1 அடித்து பிறகு ஷ அடித்தால், அதே சுழியகல நந்தி வந்து அமர்ந்து பிரிவினையைச் செவ்வனே செய்யும்.

    என் மெஷின்ல அப்படி முடிந்தது, நீங்களும் முயற்சி பண்ணி பார்த்துவிட்டு, பின்-பின்னூட்டம் போடுங்கள்.

  3. இட் ஈஸ் ஒர்க்கிங்! இதை நான் ஒரு காலத்தில் எக்ஸலில் பயன்படுத்தியிருக்கிறேன். அப்பால மறந்துபோச்சு. நல்ல வேளை, சொன்னீங்க.

Comments are closed.