கிணற்றில் விழுதல்

லவ் மேரேஜ், அரேஞ்ச்டு மேரேஜ் – என்ன டிஃபரன்ஸ்? நாம போய் கெணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ். 10 பேர் தள்ளி விட்டா அது அரேஞ்ச்டு மேரேஜ்.

தானாகப் போய் விழுந்த ஒரு நண்பர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். இது.

நான் கேட்பது என்னவென்றால், உயுவுர்து எப்டி உய்ந்தா இன்னா?

7 thoughts on “கிணற்றில் விழுதல்

 1. யாரு போய் கெணத்துல வீந்தாலும், கெணத்துல தண்ணி கீதா, நம்க்கு நீ்ச்சல் தெர்தா – இதான் கண்ணு விசயம். எவ்ளோ காலத்துக்கு இப்டி பொண்டாட்டிங்க மேல பழி போட்டுட்டு தப்பிக்க பாப்பீங்க?

 2. இந்த கமென்ட் நான் எதிர்பார்த்ததுதான். நீங்க ஏன் இந்த ஜோக்கையும் என் தத்துவத்தையும் ஆண்களுக்கு மட்டும்னு நெனைக்கறீங்க? கெணத்துல விழுறது ரெண்டு பேரும்தான். நீங்க வேணா என் போஸ்ட்டப் பாருங்க, அதுல ஜெண்டரே சொல்லல.

 3. கான்டெக்ஸ்ட்மா கான்டெக்ஸ்ட்டு! ஜெண்டர நீங்க சொல்லவேணாம். நாங்க புரிஞ்சுப்போம். சரி மனசத் தொட்டுச் சொல்லுங்க. உங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புன நண்பர் எந்த ஜெண்டர்? எனக்கு தெரிந்து இந்த மாதிரி லட்சக்கணக்கான ஜோக்குகளை விகடனிலும் குமுதத்திலும் ஆண்கள் பார்வையில் எழுதித்தான் படித்திருக்கிறேன். கெணத்தில வீழ்ந்த பெண்கள் எழுதி அல்ல.

  நீங்கள் வித்தியசமான ஆளுன்னா பொறுப்பாகாமை அறிவிப்பு போடுங்க:-)

 4. விட மாட்டீங்க போலருக்கு! எனக்கு sms அனுப்புனவரு ஆம்பிளதான். இதே எஸ்.எம்.எஸ்.ஸை எத்தன பொண்ணுங்க எத்தன பொண்ணுங்களுக்கு அனுப்பியிருப்பாங்க? அந்தப் பெறுநர் பொண்ணுங்க யாரும் blog பண்ணலன்னா அதெப்படி என் குற்றமாகும்?

  கமிங் டு த பாயின்ட், ஆண்கள் விழும்போது அடி கொஞ்சம் பலமாகப் படுகிறது என்பது என் கருத்து. நான் பார்த்த வரை அதுதான் நிஜம். நீங்கள் பார்த்தவை வேறாக இருக்கலாம். அது உங்க தப்பு.

 5. நான் பார்த்தது வேறாக இருக்கும்பட்சத்தில், அது எப்படி என் தப்பாகும்? நீங்கள் பார்த்தது உங்களுக்கு சரி, என்றால் நான் பார்த்தது எனக்குச் சரி.

 6. இந்த வெளாட்டுக்கு நான் வரல. அப்புறம் ஆணாதிக்கவாதின்னு இலேபிள் குத்திடுவாங்ய.

 7. என் நண்பர் கூறியதாவது : நாமாக விழுந்தால் அடி கொஞ்சம் குறைவாக இருக்கும்.

  எல்லாம் கற்பனை கண்ணா! படற அடி பட்டே தீரும்.

Comments are closed.