தேவையில்லாத பதிவு

 

இப்போது தட்டச்சு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பதிவு தேவையில்லாதது. ஏனென்றால் இந்தப் பதிவு தேவையில்லை என்பதுதான் இதன் சாராம்சமே.

இது தன்னைப் பற்றியே பேசுவதால் (என் மூலமாகத்தான்) இதை ரிகர்ஸிவ் பதிவு என்று சொல்லலாம். பொதுவாகப் பதிவு எழுதுவதைப் பற்றியதாகவும் இருப்பதால் meta பதிவு என்றும் இதை வர்ணிக்கலாம்.

இணைய அமைதிக்காக “This page is intentionally left blank” என்று போடுவார்களே அது போல இதுவும் ஒரு பிளாங்க் போஸ்ட்.

ஒரு வெற்றுப் பதிவு இதைப் போல் இலக்கற்ற வார்த்தை வீணடிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் அது குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றியதாக இருப்பதே நல்லது. ஆனால் ஆழமாக எதையோ சொல்ல வரும் பாசாங்கு கூட இருக்கக் கூடாது என்பதே நிபந்தனை.

இது தேவையில்லாத பதிவு என்பதை இவ்வளவு தூரம் படித்தவர்கள் யாரும் மறுக்க முடியாது (படிக்காமலே முன்முடிவால் அந்த conclusion-க்கு வந்தவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை). ஆனால் இது வெற்றுப் பதிவாக இருந்தாலும் தன் இருப்பிற்கு நியாயம் கற்பிக்க முடியாது என்பதைத் திறம்பட நிலைநிறுத்துவது இதன் குறிக்கோளாகத் திகழ்கிறது. இந்தக் குறிக்கோளைச் செவ்வனே நிறைவேற்றிவிட்ட இப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!

2 thoughts on “தேவையில்லாத பதிவு

  1. நல்ல attractive தலைப்பை வைத்து உங்கள் பதிவுகளை வாசிக்க வைக்கும் சாமர்த்தியத்திற்கு ஒரு ஷொட்டு!

  2. இந்தக் கருமத்தை எழுதவும் படம் தயாரிக்கவுமாய் எனக்கு ஒரு மணி நேரம் ஆனதை உலகறியாது.

Comments are closed.