ஈயாளுடெ இலக்கிய விசாரம்

எனக்கு சில மலையாள புத்திஜீவி நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் பழகிய தோஷத்தாலும் பொதுவாக கேரளாவைப் பற்றிய அறிவுஜீவி இமேஜ் காரணத்தாலும் அந்த ஊரில் எல்லோரும் ஓ.வி. விஜயன் படித்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

நான் எந்த மலையாள டீக்கடைக்குப் போக ஆரம்பித்தாலும் மாஸ்டரை ஆழம் பார்த்து முடித்த பின் அவர் கேரளாவில் எந்த ஊர் என்று கேட்பேன். பிறகு ஓ.வி. விஜயன், முகுந்தன், பால் ஜக்கரியா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் பற்றியெல்லாம் கேட்பேன்.

(நான் சாகித்ய அகாடமியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்த முகுந்தனின் “மய்யழிப் புழையுடெ தீரங்ஙளில்” தவிர வேறெதையும் படித்ததில்லை.)

மலையாள எழுத்தாளர்களில் படிக்கவே மிகக் கடினமானவர் என்று கருதப்படும் (கோணங்கி மாதிரி என்று நினைக்கிறேன்) ஆனந்த் என்பவரின் புத்தகங்களை ரிக்‍ஷாக்காரர்கள் கூடப் படிப்பதாக ஒரு முறை கோழிக்கோட்டு நண்பர் ஒருவர் சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த சிரிப்பு அவரது பெருமையை மறைக்கவில்லை.

எனக்கு ஸ்ட்ராங்காக, சர்க்கரை ஜாஸ்தி போட்டுத் தேனீர் வழங்கும் பல மாஸ்டர்கள் மேற்சொன்ன பிரபலங்களில் ஒருவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை. ஒருவருக்காவது ஒரு பெயராவது தெரிந்திருந்தால் நான் ஆறுதல் அடைந்திருப்பேன். முகுந்தன், விஜயன் என்றால் “இவங்கிட்ட மாட்டிக்கிட்டமே” என்கிற ரீதியில்தான் பார்க்கிறார்கள். (எனக்கும் ஏதோ ஒரு காலத்தில் திருவனந்தபுரத்தில் பத்து நாள் தங்கியபோது ஜக்கரியாவையும் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனையும் பார்த்ததை சொல்லிக்கொள்ளாமல் இருக்க முடிவதில்லை, என்ன செய்ய?)

கோழிக்கோட்டுக்காரர் இப்போது பத்திரமாக கோழிக்கோட்டிலேயே இருக்கிறார். அவர் என்றைக்காவது சென்னைக்குத் திரும்பி வந்து யாங்கைல மாட்டினால் அவரை ஒரு டீக்கடை மாஸ்டருடன் மோத விட வேண்டும்.

5 thoughts on “ஈயாளுடெ இலக்கிய விசாரம்

  1. என்ற சாத்தானே, இவரொக்க யாரா? ஞானொண்ணும் வாயிச்சிட்டல்லல்லோ?

    கொறைய கொல்லங்களுக்கு மும்பு கேரளத்திலே தாமசிச்சு, அத்ரேயுள்ளு.

  2. நிங்ஙள் பறயுன்னது பறயாம்பற்றில்லா. ஞான் டீ மாஸ்டரிடம் கேட்டு நோக்கலாம்தான். பட்சே நேத்துத்தான் ஞான் அவருடன் முகுந்தன் பத்தி சம்சாரித்து அறுத்தேன்.

  3. தங்களுக்கு எழுத்துரு பிரச்சினையா? சென்ற பதிவில் english fonts இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். இந்தப் பதிவில் மலையாளம்… அடுத்து என்ன?

  4. பாயின்ட்டோ பாயின்ட்டு. லேக்கின் மேரே சாத் சப் ஃபான்ட்டோன் பி ஹை. நான் தட்டச்சு பண்ணியதை மலையாளம் என்று அங்கீகரித்ததற்கு நன்றி.

Comments are closed.