ஓரங்கட்டேய்

ஜூனியர் விகடனில் ‘டயலாக்’ பக்கம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் ஒரிஜினலாக இருந்தது. பொது இடங்களில் மக்கள் பேசிக்கொள்வதை வாசகர்கள் கேட்டு எழுதியனுப்புபவை இந்த டயலாக்குகள். பிறகு பலர் காதில் விழுந்தது என்று சொந்தமாக எழுதிய குட்டி நாடகங்களைப் போட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து அந்தப் பக்கம் சீந்தத் தகாததாகிவிட்டது.

இன்று அந்த மாதிரி மேட்டருக்காகவே சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சைட்டைப் பார்த்தேன் – www.overheardinnewyork.com. பிடித்த உரையாடல் துண்டுகளைப் பாராட்டவும் பிடிக்காததை நிராகரிக்கவும் வசதி உண்டு.

இன்று ஒரு டீக்கடையில் காதில் விழுந்தது:

“திரிப்பியோம் எனுக்கு ஜொரோம் ஸ்டாட்டிங் ஆயிட்ச்சி.”