வலைப்பதிவு = வலைப் பத்தி

i-have-nothing-to-say.gif

இந்த வலைப்பதிவை ஒரு வித ஜுர வேகத்தில் ஆரம்பித்து ஒரு வாரம் போல் ஆகிறது. அதற்குள் மேட்டர் பஞ்சம் வந்துவிட்டது. சில பேர் எப்படித்தான் தினமும் மூணு scroll நீளத்திற்கு எழுதித் தள்ளுகிறார்கள் என்று தெரியவில்லை. பொறாமை இல்லை, ஆச்சரியம்.

சமீபத்தில் கிருபா ஷங்கரை வம்புக்கிழுத்து இந்திய வலைப்பதிவுலகில் அழியாப் புகழ் அடைந்திட்ட சென்னை வலைப்பதிவர் செந்தில், ஒரு பதிவில் தன் அம்மா (/பாட்டி) வலைப்பதிவு எழுதுவதை பத்தி (column) எழுதுவதாகப் புரிந்துகொண்டதைச் சொன்னார். அதேதான் என் கருத்தும்.

பிளாகிங் என்பது பத்தி எழுதுவது மாதிரிதான் இருக்கிறது. இன்றைக்கு இதைப் பற்றி எழுதுவோம் என்று முடிவு செய்துகொண்டு எழுதுவது பத்தி எழுதுவதுதானே. எல்லோர் விஷயத்திலும் இப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் வலைப்பதிவர்களில் அநேகர் வலைப் பத்திக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.

வலைப் பதிவு எழுதுவதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டால் இந்த blogger’s block எப்போதாவது தாக்கியே தீரும். அதற்கு சரண்டர் ஆகி எதுவும் எழுதாமல் இருப்பதை விட இப்படி ஒரு பொருத்தமான கார்ட்டூனை சுட்டுப் போட்டு ஏதோ முக்கியமான விஷயத்தைச் சொல்ல வருவது பாவ்லா செய்வது மேல்.

பி.கு.:

1. இந்தப் படம் வலைப் பத்தி கான்செப்ட்டுக்கு வலு சேர்க்கிறது.

2. வி பிளாக் கார்ட்டூன்ஸுக்கு விசிட் அடித்துப் பாருங்கள். We Blog Cartoons

One thought on “வலைப்பதிவு = வலைப் பத்தி

  1. Pingback: கில்லி - Gilli » Blog Cartoons

Comments are closed.