கீழ்க்கண்ட கார்ட்டூன்

கீழ்க்கண்ட கார்ட்டூனை அனுபவிப்பது மட்டுமில்லாமல் ஆராயவும் செய்யலாம். என்னுடைய ஆராய்ச்சி கார்ட்டூனுக்குக் கீழே.

blogjoke.gif

இந்தப் படத்தை ஃபோட்டோஷாப் உதவியுடன் மொழிபெயர்க்கக் கை துறுதுறுத்தாலும் அங்ஙனம் செய்தால் அதன் நகைச்சுவை போய்விடும் என்று விட்டுவிட்டேன். இன்னொரு காரணம் இது தமிழ் வலைப்பதிவுகளை விட ஆங்கில வலைப்பதிவுகளுக்குத்தான் நன்றாகப் பொருந்துகிறது என்பது என் அபிப்பிராயம்.

நான் பார்த்த வரை சுயபுராண வலைப்பதிவுகள் ஆங்கிலப் பதிவுகளில் இருக்குமளவுக்குத் தமிழில் இல்லை. ஒரிஜினல் கவிதைகளையும் பிற படைப்புகளையும் (பதிவுகளைப் படைப்புகள் என்று அழைத்துக்கொள்பவர்களைத் தவிர்த்து) தாங்கி வரும் வலைப்பதிவுகளை இதில் சேர்க்கவில்லை. செருப்பைத் தொலைத்ததையும் காதலியுடன் சண்டை போட்டதையும் விவரிக்கும் பர்சனல் வலைப்பதிவுகளை விட தகவல் பகிர்வு, விவாதம், நகைச்சுவை போன்றவற்றைக் கொண்டவையே தமிழில் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. நான் நினைப்பது சரியாகக் கூட இருக்கலாம்.

4 thoughts on “கீழ்க்கண்ட கார்ட்டூன்

  1. Others Others Others Others Others
    Others Others Others Others Others
    Others Others Others Others Others
    Others Others Others ….. ?

  2. கிட்டத்தட்ட அதுதான் நிலைமை. இங்கிலீஷ் மாதிரி இங்கேயும் self-centric வலைப்பதிவுகள் நூற்றுக்கணக்கில் இருந்தால் தமிழ் வலைப்பதிவுலகம் இன்னும் கலர்ஃபுல்லாக இருக்கும்தானே?

Comments are closed.