டிஸ்னியிலிருந்து கூகிளுக்கு

ஆறேழு வருடங்களுக்கு முன் மேட்டர் சைட்களில் நுழைந்தால் காணப்பட்ட வழக்கமான எச்சரிக்கை இப்படியாக இருக்கும்: “இது வயது வந்தோருக்கான சைட். உங்கள் ஊரில் இதை அனுபவிப்பது சட்ட விரோதம் என்றால் போய்விடுங்கள்.” அதற்குக் கீழே ENTER, LEAVE என்று இரண்டு விருப்பத் தேர்வுகளை வைத்திருப்பார்கள்.

LEAVE என்ற வார்த்தையில் disney.com-க்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள். இளக்காரம்தான். இப்போது அந்த மாதிரி சைட்கள் கடைசி நொடியில் மனம் மாறுபவர்களை கூகிளுக்கு அனுப்புவதாகத் தெரிகிறது. டிஸ்னிக்கு இது பெரிய இழப்பு இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம்.

பி.கு.: இது நான் தற்செயலாகக் கண்டுபிடித்தது. மேட்டர் சைட்கள் மிகவும் அருவருப்பானவை. பாலியல் மேட்டர்களைக் கொச்சைப்படுத்தாத Nerve போன்ற ரீஜன்ட் வலையகங்களுக்குத்தான் என் ஓட்டு.