த்ரிஷாவைப் பார்த்து வளரும் தலைமுறை

சுமார் 2 வயதில் எனக்கொரு மகன் இருக்கிறான். அவனுக்கு சோறு தண்ணி இறங்க வேண்டும் என்றால் டி.வி.யில் சன் மியூசிக் போட வேண்டும், அல்லது இந்த கம்ப்யூட்டரில் வீடியோ பாடல்களை ஓட்ட வேண்டும். முக்கால்வாசிப் பாடல்களில் த்ரிஷா வருகிறார். த்ரிஷா மேல் எனக்கிருக்கும் அளவு கடந்த மரியாதை என்னிடமிருந்து அவனுக்குத் தொற்றியிருக்கிறது. இதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

அவன் அதிர்ஷ்டக்காரன். நான் அவன் வயதில் இருந்தபோது அவனுக்குப் பார்க்கக் கிடைப்பது போல் த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, கோபிகா ரேஞ்சுக்கு யாரும் இல்லை. எனக்கு வாய்த்த கருப்பு-வெள்ளை டயனோரா டி.வி.யில் நான் பார்த்த அழகிகள் சீமா, சில்க் ஸ்மிதா, மஞ்சுபார்கவி, ஸ்ரீப்ரியா, மேனகா, கடும் மேக்கப்புடன் கூடிய ஸ்ரீதேவி (மூக்காபரேஷனுக்கு முன்பும் பிறகும்), படாபட் ஜெயலட்சுமி, சில சமயம் ஜெயசுதா… இந்தப் பட்டியலைத் தொடர்வதில் அர்த்தமில்லை.

என்னோடு ஒப்பிடும்போது என் மகனுக்கு இந்த வயதிலேயே அவனுடைய அழகுணர்ச்சியை வளர்க்கும் பெண்களாகக் கிடைப்பதில் எனக்கு சந்தோசமே.

9 thoughts on “த்ரிஷாவைப் பார்த்து வளரும் தலைமுறை

 1. நல்ல அம்மா இதை சொல்ல உங்களுக்கே வெட்கமாய் இல்லை? இதற்கு ஒரு பதிவு வேறு சீ……………………

 2. தோடா, வண்ட்டாரு லுங்கிய மச்சிக் கட்டிக்கினு! யாரு அம்மா? உங்கூர்ல சாத்தான்னா பொம்ளியா?

 3. :-))

  ட்ரிஷா மாதிரி குத்தாட்டம் போட வேறு எவர் கிடைப்பார்!

 4. //அழகுணர்ச்சியை வளர்க்கும் பெண்களாகக் //

  த்ரிஷாவா? நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே???

  எனக்கு அந்தம்மாவைப் பார்த்தா சின்னவயசு கமலா காமேஷைப் பார்த்த மாதிரி இருக்கு.

 5. எனக்கும்தான் சில்க் ஸ்மிதாவை ஒரு பெருங்கூட்டமே ரசிப்பதை நம்ப முடியவில்லை. அதற்கென்ன செய்ய முடியும்? அழகு பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. உங்களுக்கு அசிங்கமாகத் தோன்றும் ஒருவர் எனக்கு அழகாகத் தெரிவது சகஜம்தானே.

 6. பாலா சார், நீங்கள் சொல்வதிலும் பாயின்ட் உளது. குத்தாட்டமெல்லாம் கிரண், ரீமா சென் வகையறாவுக்குத்தான் பொருந்தும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

 7. Pingback: த்ரிஷாவுக்கு வலைப்பதிவர்கள் கட்டிய கோபுரம் « மைய நீரோட்டம்

 8. அந்த பட்டியலை தொடர்ந்திருந்தால் திருவாளர் இயக்குனர் கிங்கு, மவராசன் பாலசந்தர் தெறம காட்ட இஸ்துகினு வந்த ஒய்.விஜயா, சொல்லத்தான் நினைக்கிறேன் சுபா, சரிதா இன்ன பிற இன்னபிற… மக்கள் தொலைக்காட்சி கூட கட்டைகள் என்று கூறும் தே “வதை”களும் வந்திருப்பார்கள்.

Comments are closed.