சென்னைத் தமிழ் உச்சரிப்பில் ஆங்கிலச் சொற்கள்

தேர்ந்தெடுத்த சொற்களின் அகராதி

அக்கிஸ்ட்டு (uh-kist-tu) – Accused (rowdy, gangster, criminal)
Usage: அவன் ஒரு அக்கிஸ்ட்டுப்பா, அவங்கைல வச்சிக்காத.

பக்கிட்டி (buh-ki-tee) – Bucket
Usage:
டே, அந்த பக்கிட்டி எடு… அதில்லடா, மஞ்சா.

அசால்ட் (ah-saalt) – Casual, in a nonchalant or effortless manner
Usage: அசால்ட்டா நாலு ஆஃப் அடிக்கிறாண்டா மச்சான்!

சிகெர்ட்டு / சீர்ட்டு* (ci-ger-tu / seer-tu) – Cigarette
Usage: ஒரு சிகெர்ட்டா? யான், உனுக்கு வாணாவா?

கம்ப்பீட்ரு (kam-pee-tru) – Computer
Usage: கம்ப்பீட்ரு மூளடா உனுக்கு!

கண்ரைட்டர் (kan-rai-tar) – Conductor
Usage: கண்ரைட்டர், ரெண்டு ராகி மால்ட் – சீ, ரெண்டு சாந்தி.

சிம்ட்டி (sim-tee) – Cement
Usage:
அய்ய, இன்னாது மூஞ்சில்லாம் சிம்ட்டி? தொச்சின் வா போ.

ரீஜன்ட் (ree-juhnt) – Decent
Usage: பாக்க ரீஜன்ட்டாக்குற, ஆனா புடாக்கு மேரி பேசுற!

யெஸ்ட்ரா / யஸ்ட்ரா** (yes-traa / yuh-straa) – Extra
Usage: யெஸ்ட்ரா எதுனா வேன்னா சொல்டா.

ஃபிகுரு (fi-gu-ru) – Figure
Usage: ஃபிகுருக்காக ஃப்ரென்சிப்ப கூட உட்ருவாண்டா

ஆப்பாய்ல் / ஆபாய்ல் (aab-baai-l / aa-baai-l) – Half-boiled (egg)
Usage: டே கொச, இதாடா ஆப்பாய்லு?

ஓல்டேன் (ol-day-n) – Hold on
Usage: ட்ரைவர், ஓல்டேன், ஆல் வராங்க.

லோக்குலு (lok-ku-lu) – Local (= plain)
Usage: டே, நீதாண்டா லோக்குலு, நான் இன்டர்நேஸ்னுலு!

மேட்ரு (mat-ru) – Matter
Usage: ‘னா மேட்ரு, ஒரே டல்லாக்குறே?

மிஷ்டேக்கு (mish-tay-ku) – Mistake
Usage: ‘மால நீ பொர்ந்ததே பெரீ மிஷ்டேக்குடா தூமே!

நம்புரு (nam-bu-ru) – Number
Usage: மச்சான், உந்து இன்னா நம்புரு?

பாய்ட்டி / பாகிட்டி (paai-tee / paa-gi-tee) – Packet
Usage: லோகே, ஒரு ஃபில்ட்ரு, ஒரு தன்னி பாய்ட்டி.

டேஸ்னு (tay-snu) – Station
Usage: போல் டேஸ்னாண்ட வர் சொலோ ஒரு மிஸ்டு கால் குடு.

சொட்ரு (sot-ru) – Sweater
Usage: எதுக்கு சொட்ரு, குலுர்தா?

ஸுச்சி (su-chee) – Switch
Usage: அது பேன் ஸுச்சி, இது லைட் ஸுச்சி.

டிக்கிட்டி / டிகிட்டி (ti-ki-tee / ti-gi-tee) – Ticket
Usage: கண்ரைட்டர், அண்ணா ஸ்கொய்ருக்கு நால் டிகிட்டி!

வாச்சி / வாச்சு (vaach-chee/vaach-chu) – Watch
Usage: மச்சான், வாச்சி கட்டிகிறே?

பிகிலு (bi-gi-lu) – Whistle
Usage: ஓத்தா, அவுரு வாய்லேந்து பிகிலப் புடுங்கி ஊதுடா மொதுல்ல.

* based on suggestions by Kabali
** based on suggestions by Mahesh Ramamurthy

21 thoughts on “சென்னைத் தமிழ் உச்சரிப்பில் ஆங்கிலச் சொற்கள்

 1. Fan ‘suchee’ mela kai vai, light ‘suchee’ mela kai vai, aanaa en aalu
  ‘Suchi’ mela kai vecha, unakkuthaan ‘aapu’

 2. ஐய, எனுக்கின்னாத்துக்கு ஊராம்ட்டு ஃபிகுரு? யாங்கைல வந்து மொர்ச்சினுக்குற?

 3. சோக்கா எய்திக்கீறபா. நெக்ஷ்ட்டு இன்னா எய்தப்போற? நம்மூரு தமிளுல எத்தினி வார்த்த தெலுங்கு கீது, எத்தினி வார்த்த உருது கீதுன்னா? எய்து மாமே எய்து….

 4. நமக்கு கொஞ்ச்சோ தமில், கொஞ்ச்சோ இங்லீஸ் தவுர எதும் தெரியாதுப்பா. உம் ப்லாகு பாத்தேன். நம்ம பர்ஸ்னல் தமில வலக்கறியாப்பா? வலரு வலரு. கிரேட் மைண்ட்சு திங்கு அலைக்கு, அஆங்!

 5. நம்ம கொஸப்பேட்ட குப்ஸாமி கூட்டா? படா சோக்கா கீதுபா. இன்னும் ஜாஸ்தி எய்து பா.

 6. Soobar pa!! Kalakki potta po!!!

  Just wanted to add my two cents… Cigarette coudl also be pronounced as Seerttu…. and tikitu (ticket) in plural form is teetsu

 7. நான் சுவாரஸ்யமான உச்சரிப்புகளை மட்டுமே தொகுத்திருக்கிறேன். சீர்ட்டு 100% சரிதான், ஆனால் டீட்சு ‘சாரி கொஞ்சம் ஓவர்’ ரகம்!

 8. Extra – ‘Eshta’
  Trouser – ‘Towser’
  Kerosene Oil – ‘Krisnoil’ or ‘Kishnoil’…

 9. Nice post. I wish you had mentioned about the very prevalent kutriyalugaram in these tamilized words. Non-Tamilians often mistake the ‘u’ sound at the end of words.

 10. But then non-Tamilians can’t read the Tamil text either :-) I did intend to add some notes about phonetic patterns – like “ar” at the end of the word becoming “ru”. But it should be a different post. Thanks for the fb.

 11. நான் அழகாய் இல்லாததால்தான் நீங்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கும்.

Comments are closed.