ரயில் நிலையம் (ஒரு ஃபார்முலா கவிதை)

எல்லோரும் ஊருக்குப் போகிறார்கள்
எல்லோர் கையிலும் மூட்டை முடிச்சுகள்

எல்லோரும் வீடு திரும்புகிறார்கள்
எல்லோரிடமும் பெட்டி படுக்கைகள்

எல்லோர் கண்ணிலும் பிரிவின் வேதனை
எல்லோர் முகத்திலும் பிரிந்த நிம்மதி

எல்லோரும் வழியனுப்ப வந்திருக்கிறார்கள்
பிரிவில் வலுக்கிறது உறவு

எல்லோரும் ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள்
காத்திருப்பில் முடிகிறது பயணம்

2 thoughts on “ரயில் நிலையம் (ஒரு ஃபார்முலா கவிதை)

  1. கவிஞர்கள் வயிற்றல் அடிப்பதில் தான் எத்தனை ஆர்வம்!

  2. அதெல்லாம் பாத்தா கவிதைக்கான புதிய அழகியல்களை உருவாக்க முடியாது.

Comments are closed.