இணையத்தில் ஒரு சீரணி அரங்கம்

இந்த வலைப்பதிவுக்கு வாய்த்திருக்கும் அத்தனை ஹிட்ஸும் அனேகமாக என்னிடமிருந்துதான் வந்திருக்கும். ஒவ்வொரு வரிக்கும் ஒரு முறை, “இந்த வாக்கியம் எப்படி வந்திருக்கு பாப்பம்” என்று வேறொரு உலாவியில் திரும்பத் திரும்ப ரீலோடு செய்து பார்த்துக்கொண்டிருந்ததில் மீட்டர் ஏறியிருக்கும்.

இந்த பிளாகை யாரும் படிக்கவில்லை என்றாலும் சீரணி அரங்கத்தில் அலை கடலென, கடல் அலையெனத் திரண்டிருக்கும் மக்களிடம் பேசுவது போல் பதிவுகளில் பெருந்திரளான மக்கள் கூட்டம் ஒன்றை address செய்வது என் சுயமரியாதைக்கு முக்கியம் என்று படுகிறது. தவிரவும், ஒருவேளை தவறிப் போய் யாராவது இந்த வலைப்பதிவைப் படித்துக்கொண்டிருந்தால்? “கருமம், தனக்குத் தானே பேசிக்கிட்டிருக்கு” என்று நினைத்துக்கொண்டு போய்விட மாட்டார்களா?

மேற்கண்ட பாராவை அடித்துவிட்டு பக்கத்து ஜன்னலில் இருக்கும் satanblogs.wordpress.com-ஐ ரீலோடு செய்தேன். 100 ஹிட்ஸ்.