எனக்குப் பிடித்த ரேடியோ விளம்பரங்கள்

‘எனக்குப் பிடித்த’ என்று ஆரம்பித்து ஒரு பதிவாவது போடவில்லை என்றால் நான் வலைப்பதிவுலக மரபை மீறியவனாகி சக வலைப்பதிவாளர்களால் ஒதுக்கப்படலாம். ஆகவேதான் இந்தப் போஸ்ற்.

எனக்குப் பிடித்த இந்த இரண்டு விளம்பரங்களுமே எகனை முகனையை சிறப்பாக, அல்லது திறம்பட, அல்லது இரண்டு விதமாகவும் கையாண்டிருக்கின்றன. ஓவர் டு அடுடேஸ்மென்ட்:

1. சுவைக்கத் தெரிந்த நாக்கே
நீ விரும்புவது ஏஆர்ஆர் பாக்கே

2. இவன்தான் என் மகன் – my son
இவன் போடுற பனியன்-ஜட்டி Bison.

இரண்டிற்கும் குரலை ஈந்தவர் பல்லாயிரக்கணக்கான ரேடியோ விளம்பரங்களில் குரல் கொடுத்திருக்கிறார். நடிகர் விவேக் கூட “எப்படி இருந்த நான்” ட்ராக்கில் “எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை” என்று இவரைத்தான் கிண்டல் செய்வார்.

குரல்காரர் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் அவரைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் ஒரு குறிப்பும் இருக்கலாம்.

2 thoughts on “எனக்குப் பிடித்த ரேடியோ விளம்பரங்கள்

 1. //Speak your mind// அது கொஞ்ச கஷ்டம். முயல்றேன்.

  Bison என்னோட personal favourite. அவையத்து முந்தி இருப்ப செயல் ‘னா அது தான்.

  இன்னொண்ணு

  பெண்: பாக்கீசா பாக்கீசா பாக்கீசா அவ என்ன பெரிய அழகியா
  (அதே) ஆண்:

  கண்ணே, அது அழகியில்ல. அழகிய லுங்கி
  கட்டினாலே இன்பம் பெருகும் பொங்கி
  அது தான் பாக்கீசா லுங்கி

  :-)

 2. பாக்கீசா: விளம்பரமா அது, வெடிகுண்டு! :-)

Comments are closed.