Wednesday, Oct 21st, 2009 by சாத்தான் | 3 Comments
கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?
- வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
- போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
- நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
- முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
- ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
- பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
- சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
- உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
- இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.
Filed under: ஊடகம், புலம்பல், மொழி
Saturday, Sep 19th, 2009 by சாத்தான் | 2 Comments
என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்.
*
ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.
கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம்.
கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக இல்லாமல் போய்விடும். கவிதை மொழி என்பது தமிழ், ஆங்கிலம், கொங்கணி, பிரெஞ்சு போல ஒரு மொழிதான். அதன் எழுத்துகள் வேண்டுமானால் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம். ஆனால் அதற்கும் தனியாகச் சொற்களும் வாக்கிய அமைப்பு விதிகளும் இலக்கணமும் உண்டு.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகள் எனலாம். நடமாடும் படிமத் தொழிற்சாலைகளாகப் பிரகாசிக்கும் சிலருக்கு அந்த மொழி எழுதத் தொடங்கும்போதே கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாகக் கைவருவதோடு அவர்கள் பல தொகுப்புகள் கொண்டுவந்து புத்தக மதிப்புரையாளர்களாகவும் நிறுவப்பட்டுவிடுவது இன்றைய வரலாறு.
ஒரு கவிஞன் தனது முதல் தொகுப்பைப் பிரசவிக்கும்போது கன்னித்தன்மையை இழக்கிறான். எண்ணிறந்த தமிழ்க் கவிஞர்களால் ஊக்குவிக்கப்பெற்று கவிதை எழுதத் தொடங்கிய நான் கவிஞன் என்கிற முறையிலே இத்தொகுப்பின் மூலம் எனது கன்னித்தன்மையை இழப்பதில் நெகிழ்ச்சியடைகிறேன்.
கவிதையை அணுவணுவாக ரசிக்கும் என் நண்பர்களின்றி இந்தத் தொகுப்பு சாத்தியமாக வாய்ப்பிருக்க முடியாது. அவர்களுக்கு நான் பெரிதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
Tuesday, Aug 4th, 2009 by சாத்தான் | 2 Comments
சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.
பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:
According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power project.
The Nuclear Power Corporation of India Ltd (NPCIL) is working on the 2×1000 MW project with Russian technical assistance.
The first unit is expected to be commissioned early next year.
As per the deal between India and Russia, two more reactors of similar or even slightly higher capacity will come up at Kudankulam.
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கிறார்கள். அந்த நாலு பாராவைத் தனி செய்தியாகப் போடுவதற்கு மேட்டர் போதாதோ என்னவோ. போதாமைக்கு சைடில் தமிழ்நாடு வரைபடம் வேறு. புனே, சட்டீஸ்கர் கட்டுரைக்கெல்லாம் மேப்பைப் போடக் காணோம்.
Filed under: ஊடகம், ரோசனை
Thursday, Jul 23rd, 2009 by சாத்தான் | 0 Comments
ஆலன் மூர், நீல் கெய்மன் போன்ற காமிக்ஸ் ஓவியர்களுடன் இணைந்து பணியாற்றிய பெரிய எழுத்துக் கலைஞரான* Todd Klein தனது வலைப்பதிவில் எழுத்துக் கலையின் நுட்பங்களைப் படங்களுடன் எழுதுகிறார். பல நல்ல நாவல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் சுருக்கமாக, அழகாக அறிமுகப்படுத்துகிறார்.
அவரது வலைப்பதிவு இங்கே. டாடின் வலையகத்தில் கூடப் பார்க்கவும் படிக்கவும் நிறைய இருக்கிறது. அவர் நல்ல ஓவியர் கூட.
*lettering artist – பலூன்களுக்குள் உரையாடல்களை எழுதுபவர், அட்டை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு லோகோக்களை வடிவமைப்பவர்…
Filed under: ஊடகம், கலை, பரிந்துரை
Friday, Jul 17th, 2009 by சாத்தான் | 2 Comments

எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்
இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று பீட்டர் விடுகிறது. Made my day!